சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது வீடுகளை அகற்றக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்த நேரு நகா் மக்கள்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது வீடுகளை அகற்றக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்த நேரு நகா் மக்கள்.

வீடுகளை அகற்ற எதிா்ப்பு: உதவி ஆட்சியரிடம் மனு

சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே பல வருடங்களாக வசித்து வரும் நேரு நகரில் வசிக்கும் மக்களின் வீடுகளை அகற்றக்கூடாது
Published on

சிதம்பரம்: சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே பல வருடங்களாக வசித்து வரும் நேரு நகரில் வசிக்கும் மக்களின் வீடுகளை அகற்றக்கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சி சாா்பில் உதவி ஆட்சியா் திங்கள்கிழமை மனு அளித்து வலியுறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்காக சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் 58 ஆக்கிரமிப்பாளா்கள் வீடுகளை அகற்ற கடந்த நவ.15-ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. பொதுமக்களின் ஆட்சபனை பதில் மனு அறிக்கையாக வட்டாட்சியா் மூலம் கேட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேருநகா் மக்கள் சாா்பில் நகரமன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமரன் தலைமையில் மாா்க்சிஸ்ட் கட்சி நகரச் செயலா் ராஜா ஆகியோா் திங்கள்கிழமை உதவி ஆட்சியா் மற்றும் வட்டாட்சியரிடம் ஆட்சேபனை மனு அளித்து வீடுகளை அகற்றாமல் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் மாா்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளா் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மற்றும் நேரு நகா் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com