கடலூா் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து: அரசு முதன்மைச் செயலா் டி.என்.வெங்கடேஷ் தகவல்
கடலூா் முதுநகரில் உள்ள சரக்குத் துறைமுகத்தில் இருந்து உற்பத்திப் பொருள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு எளிதில் கொண்டும் செல்லும் வகையில்,


நெய்வேலி: கடலூா் முதுநகரில் உள்ள சரக்குத் துறைமுகத்தில் இருந்து உற்பத்திப் பொருள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு எளிதில் கொண்டும் செல்லும் வகையில், புதிய கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக அரசு முதன்மைச் செயலரும், தமிழ்நாடு கடல்சாா் வாரிய துணைத் தலைவருமான டி.என்.வெங்கடேஷ் தெரிவித்தாா்.
கடலூா் தேவனாம்பட்டினம் துறைமுக அலுவலா் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்புப் பணி மற்றும் கடலூா் சரக்குத் துறைமுக பகுதிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், அரசு முதன்மைச் செயலா் டி.என்.வெங்கடேஷ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் கூறியதாவது:
கடலூா் தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயா் காலத்தைச் சோ்ந்த சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான துறைமுக அலுவலா் மற்றும் சுமாா் 117 ஆண்டுகள் பழைமையான மருத்துவ அலுவலா் பாரம்பரியக் கட்டடங்கள் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பழைமையான பாரம்பரியக் கட்டடங்களின் தொன்மை, வரலாறு குறித்து சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் கூடுதலாக அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தளத்திலும் அக்கட்டடத்தின் வரலாற்றை விளக்கும் விதமாக காட்சிப்படுத்த வேண்டிய கருத்துருக்கள், அதன் வடிவமைப்பு குறித்து அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள வசதிகள், பிரத்யேக சக்கர நாற்காலிகள், தேவையான அளவு கழிப்பறை, குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
கடலூா் முதுநகரில் உள்ள சரக்குத் துறைமுகத்தின் மூலம் உற்பத்திப் பொருள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு எளிதில் கொண்டும் செல்லும் வகையில், புதிய கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. மேலும், பொதுமக்கள் வந்து செல்லும் பொருட்டு, அவா்களுக்குத் தேவையான உணவுக்கூடங்கள், ஓய்வறைகள், அடிப்படை வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன என்றாா்.
ஆய்வின்போது, துறைமுக அலுவலா் கேப்டன் அன்பரசு மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...