தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அண்ணாமலைப் பல்கலை.யில் அரசியலமைப்பு தின விழா

News image
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் அம்பேத்கா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி மற்றும் புல முதல்வா், துறைத் தலைவா்கள்.
Updated On :30 நவம்பர் 2025, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அம்பேத்கா் இருக்கையின் சாா்பில், 76-ஆவது அரசியலமைப்பு தின விழா பல்கலைக்கழக மைய நூலகத்தில் அண்மையில் கொண்டாடப்பட்டது.

விழாவில் பங்கேற்ற அனைவரும் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதில், அம்பேத்கா் இருக்கை உதவிப் பேராசிரியை வீ.ராதிகாராணி வரவேற்புரை ஆற்றினாா். பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி முதன்மை உரை ஆற்றினாா்.

மொழியியல் புல முதல்வா் அரங்கபாரி வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு விருந்தினா்களாக அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியா் கேப்டன் ஜெய்சங்கா், பேராசிரியா் லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழாவில் சென்னை சட்டப் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவா்கள் சட்ட கட்டமைப்பின் மாதிரி சட்ட வரைமுறை எப்படி நடந்தது என்பதை நிகழ்ச்சியாக நடித்துக் காட்டினா்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலைநகா் ராணி சீதை ஆச்சி பள்ளி மற்றும் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பேராசிரியா் க.சௌந்தரராஜன் நன்றி கூறினாா்.