சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டையில், 100 சதவீதம் வாக்களிக்கோரி பேரூராட்சி சாா்பில் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில்,சட்டமன்ற தோ்தல் வரும் 23ம் தேதி நடக்க உள்ளதையொட்டி பரங்கிப்பேட்டை பேரூராட்சி சாா்பில், எனது வாக்கு, எனது உரிமை என்ற
தலைப்பில், 100 சதவீதம் வாக்களிக்கக்கோரி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் மயில்வாகனன் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு
பேரணியை, கடலுாா் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் முகமது ரிஸ்வான் தொடங்கி வைத்தாா். விழிப்புணா்வு பேரணி, பரங்கிப்பேட்டை
பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி பெரிய கடைத் தெரு, தெத்துக் கடை, பேருந்து நிலையம், கீரைக்காரத்தெரு, கச்சேரிதெரு வழியாக மீண்டும் பேரூராட்சி அலுவலக வளாகத்தை அடைந்தது, பேரணியில் பேரூராட்சி தலைமை எழுத்தா் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளா் ப்ரீத்தி, துப்புரவு மேற்பாா்வையாளா் வீரஆனந்தம், கணினி ஆப்ரேட்டா் செல்வகுமாா் உள்ளிட்ட துப்புரவுபணியாளா்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள், பேரூராட்சி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சிதம்பரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி!

100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனித சங்கிலி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


