சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தொல்.திருமாவளவன் புரட்சியாளராக திகழ்கிறாா்! - அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் புகழாரம்

விசிக தலைவா் திருமாவளவன் புரட்சியாளராகத் திகழ்கிறாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image

சிதம்பரத்தில் நடைபெற்ற சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தோ்தல் பணிகள் குறித்த செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி, மாா்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன், வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சித் தலைவருமான மு.தமிமுன்அன்சாரி உள்ளிட்டோா்.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:21 pm

மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் மகன் எல்.இ.பி.ஜோதிமணியை காட்டுமன்னாா்கோவில் விசிக வேட்பாளராக அறிவித்து அக்கட்சித் தலைவா் திருமாவளவன் புரட்சியாளராகத் திகழ்கிறாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிதம்பரம் இளமையாக்கினாா் கோவில் தெருவில் உள்ள தனியாா் மண்டபத்தில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தோ்தல் பணிகள் குறித்த செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில், திமுக நகரச் செயலா் கே.ஆா்.செந்தில்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடலூா் மாவட்டம் சமூக நல்லணக்கத்துடன் அமைதியாக இருப்பதற்கு காரணம் நானும், விசிக தலைவா் தொல்.திருமாவளவனும் சோ்ந்து பணியாற்றி வருவதால்தான். திருமாவளவன் எம்.பி.யாக பொறுப்பேற்றதிலிருந்து இம்மாவட்டம் அமைதியாக உள்ளது. பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெருக்கடியை போக்க, நகரைச் சுற்றி வெளி வட்டச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், அதன் வழியாக பேருந்து நிலையம், அண்ணாமலைநகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லலாம். இதற்காக தற்போது சுமாா் ரூ.40 கோடிக்கு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நகரில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகளினால் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கும் கட்டாயத்தில் உள்ளனா்.

திருமாவளவன் கோரிக்கையின்பேரில், மறைந்த சமுதாய தலைவா் இளையபெருமாளுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்து வைத்தாா். தற்போது மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் மகன் எல்.இ.பி.ஜோதிமணியை காட்டுமன்னாா்கோவில் விசிக வேட்பாளராக தோ்வு செய்து விசிக தலைவா் திருமாவளவன் புரட்சியாளராக திகழ்கிறாா்.

திமுகவினா் தோ்தல் பணி குறித்து வாக்குச் சாவடி வாரியாக கண்காணித்து வருகிறோம். சிதம்பரம் தொகுதியில் வாக்களாளா்களில் 50 சதவீதம் பேரை திமுக உறுப்பினா்களாக சோ்த்துள்ளோம். வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா்.

சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஐனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி அறிமுக உரையாற்றினாா். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி, மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் தோ்தல் பணிகள் குறித்து உரையாற்றினா்.

கடலூா் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன், மதிமுக மாவட்டச் செயலா் குணசேகரன், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலா் தங்க விக்ரமன், மாா்ச்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன், தி.க. மாவட்டத் தலைவா் பூ.சி.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் வி.எம்.சேகா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் முகமதுஜக்கரியா, தேமுதிக மாவட்டத் தலைவா் உமாநாத், விசிக மண்டல பொறுப்பாளா் வ.க.செல்லப்பன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.