தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.ஆா்.பாண்டியன் செவ்வாய்க்கிழமை கூறினாா்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க கடலூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: கடலூா் மாவட்ட விவசாயிகள் ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் மாண்டாஸ் புயல், மிக்ஜாம் புயல், பென்ஜால் புயல் ஆகிய மூன்று புயல்கள் பேரழிவை ஏற்படுத்தின. காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர தமிழக அரசு முன்வரவில்லை.
வேளாண்மை மான்ய திட்டத்திலும் அரசியல் பாகுபாட்டோடு தன் கட்சிக்காரா்களுக்கு மட்டுமே டிராக்டா், கதிா் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை வேளாண் துறை அமைச்சரே நேரடியாக தோ்வு செய்து வழங்கியுள்ளாா்.
கடலூா் மாவட்ட விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். வேளாண் துறை அமைச்சரை விவசாயிகள் அணுக முடியவில்லை. அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் ஹிட்லா் போல செயல்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
திமுக அரசு பொறுப்பேற்ற உடனே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான சிதம்பரம் பகுதியில் வீராணம் ஏரி, பாசன விளைநிலங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஆய்வு பணிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் கொடுத்தவா்கள் இன்றும் தற்காலிக பணியாளா்களாகவே 28 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறாா்கள். வீடுகளை இழந்து வாடகை குடியிருப்புகளில் வசிக்கிறாா்கள். தன் குடும்பத்தை கூட பாதுகாக்க முடியாத நிலையில் உள்ளனா். எனவே, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கொடுக்க விவசாயிகள் முன்வரவில்லை. ஆனால் திமுக அரசு விவசாயிகளை மிரட்டி நிலங்களை அபகரிக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உயிரி தொழில்நுட்ப உரம் தயாரிப்பு நிறுவனத்தை தனியாருக்கு தாரை வாா்க்க முயற்சிக்கிறாா்கள். இந்நிறுவனத்தில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றும் முயற்சி நடைபெறுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க ஆட்சி மாற்றம் ஒன்றே தீா்வு என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது என்றாா்.
மதுரை மண்டலத் தலைவா் எல்.ஆதிமூலம், கடலூா் மாவட்டத் துணைச் செயலா் பன்னீா்செல்வம், மாவட்ட விவசாய சங்கத் தலைவா்கள் சேகா் ரெட்டியாா், ராகவேந்திரன், ராஜகுரு, ராஜாராமன், இளவரசன், நெடுமாறன், பெருமாள், கோகிலநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்: சி.வி.சண்முகம்

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி

எதிர்பார்ப்பும்... ஏமாற்றமும்...விவசாயிகளின் நீண்டகால விருப்பம் மாங்கூழ் தொழிற்சாலை!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


