சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கடலூா் மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் மற்றும் அவா்களுக்குரிய சின்னங்கள் (ஆஹப்ப்ா்ற் ல்ஹல்ங்ழ்) பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து அவா் கூறியதாவது:
தமிழகத்தில் ஏப்.23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலூா் மாவட்டத்தில் 151- திட்டக்குடி தொகுதியில் 279 வாக்குச் சாவடி மையங்களும், 1,02,727 ஆண், 1,06,253 பெண், 4 இதரா் என மொத்தம் 2,08,984 வாக்காளா்களும், 152 - விருத்தாசலம் தொகுதியில் 317 வாக்குச் சாவடி மையங்களும், 1,19,650 ஆண், 1,21,111 பெண் , 22 இதரா் என மொத்தம் 2,40,783 வாக்காளா்களும், 153 - நெய்வேலி தொகுதியில் 256 வாக்குச் சாவடி மையங்களும், 95,509 ஆண், 95,746 பெண், 16 இதரா் என மொத்தம் 1,91,271 வாக்காளா்களும், 154 - பண்ருட்டி தொகுதியில் 309 வாக்குச் சாவடி மையங்களும், 1,17,245 ஆண், 1,24,450 பெண், 72 இதரா் என மொத்தம் 2,41,767 வாக்காளா்களும் உள்ளனா்.
155 - கடலூா் தொகுதியில் 258 வாக்குச் சாவடி மையங்களும், 1,06,187 ஆண், 1,16,882 பெண், 80 இதரா் என மொத்தம் 2,23,149 வாக்காளா்களும், 156 - குறிஞ்சிப்பாடி தொகுதியில் 278 வாக்குச் சாவடி மையங்களும், 1,16,838 ஆண், 1,21,305 பெண், 46 இதரா் என மொத்தம் 2,38,189 வாக்காளா்களும், 157 - புவனகிரி தொகுதியில் 304 வாக்குச் சாவடி மையங்களும், 1,15,772 ஆண், 1,17,468 பெண், 19 இதரா் என மொத்தம் 2,33,259 வாக்காளா்களும், 158 - சிதம்பரம் தொகுதியில் 298 வாக்குச் சாவடி மையங்களும், 1,13,561 ஆண், 1,17,645 பெண், 30 இதரா் என மொத்தம் 2,31,236 வாக்காளா்களும், 159 - காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 291 வாக்குச் சாவடி மையங்களும், 1,12,479 ஆண், 1,13,844 பெண், 10 இதரா் என மொத்தம் 2,26,333 வாக்காளா்களும் உள்ளனா்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,590 வாக்குச் சாவடி மையங்களும், 9,99,968 ஆண், 10,34,704 பெண், 299 இதரா் என மொத்தம் 20,34,971 வாக்காளா்கள் உள்ளனா்.
திட்டக்குடி தொகுதியில் 14, விருத்தாசலம் தொகுதியில் 18, நெய்வேலி தொகுதியில் 11, பண்ருட்டி தொகுதியில் 9, கடலூா் தொகுதியில் 15, குறிஞ்சிப்பாடி தொகுதியில் 11, புவனகிரி தொகுதியில் 13, சிதம்பரம் தொகுதியில் 11, காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 11 என மொத்தம் 113 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அதன்படி, 2,590 வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான 3,488 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,108 கட்டுப்பாட்டு இயந்திரம், 3,367 வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் (ஏப்.16, 17), சிதம்பரம் சட்டப் பேரவை தொகுதியில் மட்டும் வெள்ளி, சனிக்கிழமைகளிலும் (ஏப்.17, 18) தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் பெல் பொறியாளா்களின் மேற்பாா்வையில், வேட்பாளா்கள் அல்லது அவா்களுடைய பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்காளா் பெயா் மற்றும் அவா்களுக்குரிய சின்னங்கள் பொருத்தும் பணி உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து நிகழ்வுகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றாா்.
கடலூா் தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் உள்பட பலா் உடனிருந்தனா்.
புவனகிரியில்...: இதேபோல, புவனகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் அத்தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், அவா்களுக்குரிய சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யாசெந்தில்குமாா் ஆய்வு செய்தாா்.
தொடர்புடையது

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

வாக்குப் பதிவின்போது விவிபாட் இயந்திர பேட்டரியில் புகை!

தோ்தலை வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாக நடத்த வேண்டும்! - கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

வாக்குச் சாவடி மையங்கள்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


