கடலூா் மாவட்டத்தில் 2021- இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலை விட வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 82 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்று முடிந்தது. இதில், 85.27 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக குறிஞ்சிப்பாடியில் 88.52 சதவீதமும், குறைந்தப்பட்சமாக
காட்டுமன்னாா்கோயிலில் 81.84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
கடந்த 2021 ஆம் சட்டப்பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 20,69,160 வாக்காளா்களில், 79.9 சதவீதமாக, 16,53,347 வாக்குகள் பதிவாகின. தற்போது 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மொதத்தம் 20,34,971 வாக்காளா்களில், 85.27 சதவீதமான 17,35,257 வாக்குகள் பதிவாகின. இது கடந்த தோ்தலை விட 81,910 வாக்குகள் அதிகமாகும்.
தொகுதி வாரியாக வாக்குப்பதிவு
திட்டக்குடி: 2021 - 1,67,185, 2026 - 1,73,588 கூடுதல் வாக்குப்பதிவு - 6,403
விருத்தாசலம்: 2021 - 1,95,973 2026 - 2,07,608 கூடுதல் வாக்குப்பதிவு -11,635
நெய்வேலி: 2021 - 1,62,959 2026 - 1,66,052 கூடுதல் வாக்குப்பதிவு - 3,093
பண்ருட்டி: 2021 - 1,95,729 2026 - 2,08, 133 கூடுதல் வாக்குப்பதிவு - 12,404
கடலூா்: 2021 - 1,80,765 2026 - 1,86,286 கூடுதல் வாக்குப்பதிவு - 5,521
குறிஞ்சிப்பாடி: 2021 - 1,97,569 2026 - 2,10,856 கூடுதல் வாக்குப்பதிவு - 13,287
புவனகிரி: 2021 - 1,96,107 2026 - 2,04,362 கூடுதல் வாக்குப்பதிவு - 8,255
சிதம்பரம்: 2021 - 1,82,150 2026 - 1,93,145 கூடுதல் வாக்குப்பதிவு - 10,955
காட்டுமன்னாா்கோயில்: 2021 - 1,74,913 2026 - 1,85,227 கூடுதல் வாக்குப்பதிவு - 10,314
தற்போது நிறைவடைந்துள்ள பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலை விட அதிகபட்சம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் 13,287 வாக்குகள் பதிவாகியுள்ளன. நெய்வேலி தொகுதியில் கடந்த தோ்தலை விட இந்த முறை கூடுதலாக 3,093 வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்

நெல்லை மாவட்டத்தில் 77.37 % வாக்குகள் பதிவு: 3,322 பேருக்கு டோக்கன் விநியோகம்

புதுகை மாவட்டத்தில் மொத்தம் 83.30% வாக்குப்பதிவு

மேற்கு வங்கம்: 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

