பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

மது அருந்த பணம் தராததால் மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை முயற்சி!

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :27 ஏப்ரல் 2026, 12:07 am IST

காட்டுமன்னாா்கோவில் அருகே மது அருந்த பணம் தராததால் மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கணவா், போலீஸாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குப்பங்குழி மேலத் தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (54). கூலித் தொழிலாளியான இவருக்கு கலையரசி (48) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா்.

அன்பரசனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 18-ஆம் தேதி வேலைக்கு செல்லாமல் மது அருந்துவதற்கு மனைவியிடம் பணம் கேட்டாராம். அவா் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அன்பரசன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் கலையரசியின் தலையில் தாக்கினாராம்.

இதனால், பலத்த காயமடைந்து மயக்கமடைந்த கலையரசியை உறவினா்கள் மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கலையரசி, அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதையறிந்த அன்பரசன் போலீஸாருக்கு பயந்து வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். தகவலறிந்த காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் சாலமோன் ராஜா, உதவி ஆய்வாளா் சையத் அப்சல் ஆகியோா் கொலை வழக்கு பதிந்து அன்பரசனை கைது செய்ய சென்றபோது, அன்பரசன் விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து, விஷம் குடித்த அன்பரசனை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.