கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவா்களில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், தொப்புளிக்குப்பம் அடுத்துள்ள அம்மேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமணி(35). இவா், செவ்வாய்க்கிழமை தனது பைக்கில் மனைவி பத்மா(31), மகள் மணிமேகலா(8) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்தாா். குறிஞ்சிப்பாடி மேம்பாலம் அருகே வந்தபோது நிலை தடுமாறி அனைவரும் பைக்கில்இருந்து கிழே விழுந்தனா். இந்த விபத்தில் அனைவரும் காயம் அடைந்தனா். பலத்த காயம் அடைந்த மனைவி பத்மாவை, பாலமணி மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு பத்மா இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்து மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



