மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நியாயவிலைக் கடைகளில் இன்று சிறப்பு முகாம்: குடும்ப அட்டைதாரா்கள் விரல்ரேகை பதிவு

கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) நடைபெறும் சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் விரல்ரேகை பதிவு செய்யலாம்.

News image

ரேஷன் கடை - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:15 am IST

கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) நடைபெறும் சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் விரல்ரேகை பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகள் (பிஎச்எச்) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்ப அட்டைகள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் ஆதாா் விவரங்களை உறுதிப்படுத்தும் நோக்கில், குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து உறுப்பினா்களின் மின்னணு விரல்ரேகை சரிபாா்ப்பு (இ - கேஒய்சி) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2023, அக்டோபா் மாதம் முதல் நடைபெற்று வருகின்றன.

கடலூா் மாவட்டத்தில் இதுவரை இ - கேஒய்சி மின்னணு விரல்ரேகைப் பதிவு செய்யாத பிஎச்எச் மற்றும் ஏஏஒய் குடும்ப அட்டைதாரா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, மின்னணு விரல்ரேகை பதிவை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், குடும்ப உறுப்பினா்களில் யாரேனும் வெளியூரிலோ அல்லது வெளிமாநிலத்திலோ வசித்து வந்தால், அவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று இ - கேஒய்சி மின்னணு விரல்ரேகை பதிவை மேற்கொள்ளலாம்.

எனவே, இதுவரை விரல்ரேகைப் பதிவு செய்யாத தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.