பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வீடு புகுந்து திருட முயற்சி: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கன்னித்தமிழ்நாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (52). இவரும், இவரது மனைவி இந்திராணியும் வெள்ளிக்கிழமை இரவு கூரை வீட்டில் படுத்துத் தூங்கினா். சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீட்டினுள் புகுந்த மா்ம இளைஞா், இந்திராணி அணிந்திருந்த தாலியில் இருந்த கால் பவுன் நகையை திருட முயன்றாராம்.

அப்போது, இந்திராணி கூச்சலிடவே, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, குறிஞ்சிப்பாடி வட்டம், ஆயிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அஜிஸை (19) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.