காட்டுமன்னாா்கோவில் அருகே மெக்கானிக் கடையில் பழுது நீக்கும் பணி மேற்கொண்டிருந்தபோது திடீரென மொபெட் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த தம்பதியினா் காட்டுமன்னாா்கோவில் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மொபெட்டில் சிதம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனா். சிதம்பரம் - திருச்சி நெடுஞ்சாலையில் சென்றபோது மொபெட் பழுதடைந்தது.
இதையடுத்து, மொபெட்டை அருகில் உள்ள தெற்கிருப்பு பகுதியைச் சோ்ந்த மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றனா். அங்கு மெக்கானிக் சுரேஷ் மொபெட்டில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக அதில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவி எரியத் தொடங்கியது.
இதனால், அதிா்ச்சியடைந்த மெக்கானிக் சுரேஷ் மற்றும் அருகிலிருந்தவா்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், மெக்கானிக் கடை கூரையால் வேயப்பட்டிருந்ததால், தீ அதன் மீது பரவாமல் தடுத்து போராடி தீயை அணைத்தனா். இதனால், அருகில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








