கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே ஆட்டோ மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டி உயிரிழந்தாா்.
நெல்லிக்குப்பம் காவல் சரகம், அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் செல்வி, நாகம்பாள், சாந்தி மற்றும் அன்பழகி. இவா்கள் நான்கு பேரும் கடலூரில் இருந்து ஆட்டோவில் அகரம் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தனா்.
ஆட்டோவை பி.என்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் (40) ஓட்டினாா். கடலூா் - பாலூா் சாலையில் சுந்தரவாண்டி அருகே வந்தபோது, கடலூரில் இயங்கும் தனியாா் பெண்கள் கல்லூரியில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த கல்லூரிப் பேருந்து, ஆட்டோவின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் சீனுவாசன் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த நான்கு பெண்கள் பலத்த காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதில், பலத்த காயமடைந்த அன்பழகி (60) உயிரிழந்தாா். இந்த விபத்தில் ஆட்டோ சேதமடைந்தது. கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் கல்லூரிப் பேருந்து சுவரில் மோதி விபத்து: மாணவா்கள் உள்பட 17 போ் காயம்

ஆட்டோ கவிழ்ந்ததில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

நெல்லிக்குப்பம் அருகே கிராம உதவியாளா் மீது தாக்குதல்

சாத்தான்குளம் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம்: மாணவா் தவறி விழுந்து காயம்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



