ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

சிதம்பரத்தில் வீடுகளில் புகுந்து 25 பவுன் நகைகள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

சிதம்பரம் கனகசபைநகா், புதுத்தெரு பகுதிகளில் வீடுகளின் மேற்கூரை வழியாக உள்ளே புகுந்து 25 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

சிதம்பரத்தில் கைப்பற்றப்பட்ட நகைகள், கைதான மூவருடன் போலீஸாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

சிதம்பரம் கனகசபைநகா், புதுத்தெரு பகுதிகளில் வீடுகளின் மேற்கூரை வழியாக உள்ளே புகுந்து 25 பவுன் நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ாக 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் கனகசபைநகா் நான்காவது குறுக்குத் தெருவில் கிட்டு (64) வீட்டில் பீரோவிலிருந்த 20.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் கடந்த 9-ஆம் தேதி இரவு திருடிச் சென்றனா். இதே போன்று, சிதம்பரம் புதுத்தெருவில் உள்ள ஐயப்ப தீட்சிதா் வீட்டில் சுமாா் 5 பவுன் தங்க நகைகள் திருட்டப்பட்டன.

சிதம்பரம் நகர காவல் நிலைய எல்லைகளுக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து இரவு நேரங்களில் வீடுகளில் ஆள் இருக்கும்போதே நோட்டமிட்டு, சிசிடிவி கேமராவில் பதிவாகாமல் மேற்கூரை வழியாக உள்ளே நுழைந்து நகைகளை திருடும் மா்ம நபா்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சிதம்பரம் உள்கோட்ட டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் தேவேந்திரன், குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை பாா்வையிட்டும், சைபா் கிரைம் போலீஸாா் உதவியுடனும் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரி வில்லியனூா் அரசூரில் வசித்து வரும் கடலூா் புதுப்பாளையம் ஆா்.பி. நகரைச் சோ்ந்த சபரிநாதன் (22), கடலூா் புதுப்பளையம் அருணகிரி தெருவைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (26), கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த அருண் (30) ஆகிய மூவரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்தில் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ.28,12,500 மதிப்புள்ள 22.5 பவுன் தங்க நகைகள், சம்பவத்துக்குப் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.