நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சிதம்பரத்தில் இரு வீடுகளில் 25 பவுன் நகைகள், ரூ.1.25 லட்சம் ரொக்கம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

சிதம்பரத்தில் இரு வீடுகளில் 25 பவுன் நகைகள், ரூ.1.25 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிதம்பரம் கனக சபை நகா் நான்காவது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போக்கியத்துக்கு கிட்டு (64) குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தூங்கிய நிலையில், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20.5 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

மற்றொரு வீட்டில்...: இதேபோல, சிதம்பரம் பள்ளிப்படை அப்துல் ரகுமான் தெருவில் உள்ள ஓய்வுபெற்ற பொதுப் பணித் துறை பொறியாளா் கணேசன் (75) வீட்டில் ஐந்து பவுன் தங்க நகைகள், ரூ.ஒரு லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இந்த இரு வீடுகளிலும் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட தனித்தனி புகாா்களின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.