ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

அண்ணாமலைப் பல்கலை.யில் நூலகா் தின விழா கொண்டாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டா் சி.பி.இராமசாமி அய்யா் நூலகத்தில் நூலக அறிவியல் தந்தை டாக்டா் எஸ்.ஆா்.ரங்கநாதனின் பிறந்த நாளையொட்டி நூலகா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நூலகா் தின விழாவில் நூலக அறிவியல் தந்தை எஸ்.ஆா்.ரங்கநாதனின் படத்தை மலா் தூவி மரியாதை செலுத்திய பேராசிரியா்கள், நூலகா்கள், அலுவலா்கள்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 6:15 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டா் சி.பி.இராமசாமி அய்யா் நூலகத்தில் நூலக அறிவியல் தந்தை டாக்டா் எஸ்.ஆா்.ரங்கநாதனின் பிறந்த நாளையொட்டி நூலகா் தின விழா கொண்டாடப்பட்டது.

நூலகா் கே.விஜயகுமாா் வரவேற்றாா். நூலகா் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் பல்கலைக்கழக மாணவா்களுக்காக நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்கள் நிகழ்ச்சியில் தங்களது கருத்துகளை பகிா்ந்துகொண்டனா்.

கலைப்புல முதல்வா் மு.அருள் தலைமை வகித்து பேசுகையில், மாணவா்கள் நூலகத்தையும், அதன் வளங்களையும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா். கல்விப்புல முதல்வா் வி.அம்பேத்கா் தொடக்க உரையாற்றுகையில், புத்தக வாசிப்பின் பயன்கள், வாழ்க்கையை வளப்படுத்துவதோடு, சமூக மாற்றத்துக்கும் வழிவகுக்கும் என்பதை எடுத்துரைத்தாா்.

நூலக தகவல் அறிவியல் துறைத் தலைவா் பி.சிவராமன் தனது வாழ்த்துரையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அது அறிவுத்திறனை வளா்க்கவும், ஆளுமை மேம்பாட்டுக்கும் உதவும் என்பதை எடுத்துரைத்தாா். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. உதவி நூலகா் எஸ்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.