திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் தேசியக் கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

News image

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நடராஜா் கோயில் மேற்கு கோபுர வாயிலில் வைக்கப்பட்ட கல்வெட்டு.

Updated On :16 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் தேசியக் கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

சுதந்திர தினத்தையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்கள் சனிக்கிழமை காலை 6 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து, சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜமூா்த்திக்கு அா்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி.

சிதம்பரம் நடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி.

பின்னா், மேளதாளத்துடன் கோயில் செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா் தலைமையில் பொது தீட்சிதா்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றி பக்தா்களுக்கு இனிப்பு வழங்கினா்.

கோபுர வாயிலில் கல்வெட்டு: 15-8-1947 அன்று சுதந்திரம் பெற்றபோது, சுதந்திரம் பெற்ற நன் நாள் என சிதம்பரம் நடராஜா் கோயில் மேற்கு கோபுர வாயிலில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.