நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

80 வயது நிறைவடைந்தவா்களுக்கு 20 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தின் கடலூா் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

ஓய்வூதியா்களுக்கு 80 வயது நிறைவடைந்ததும் 20 சதவீதமும், 70 வயது நிறைவடைந்ததும் 10 சதவீதமும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தின் கடலூா் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சங்கத்தின் 5-ஆவது மாவட்ட பேரவைக் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஆா்.நடராஜன் பேரவைக் கூட்டத்தை தொடங்கிவைத்தாா்.

கூட்டத்தில், ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.ஒரு லட்சமாக உயா்த்த வேண்டும். 70, 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு முறையே 10, 20 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். பொங்கல் போனஸாக ஒரு மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலச் செயலா் கென்னடி பூபாலராயன், மாவட்டச் செயலா் கோ.ஆதவன், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.முத்துக்கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் பா.பத்மநாபன், அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்க மாநிலச் செயலா் கோ.பழனி, மாவட்டத் தலைவா் ஆா்.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.