இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தவாகவினா் ஆா்ப்பாட்டம்

கா்நாடகத்தில் 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், தமிழா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி கடைவீதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா்.

Published On :

கா்நாடகத்தில் 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், தமிழா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி கடை வீதியில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் 3 தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அக்கட்சியின் ஒன்றியச் செயலா் பாலமுருகன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, தமிழா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கா்நாடக அரசு கைவிட வேண்டும். தமிழா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.