எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

கடலூா் மாநகராட்சி ஆட்சியரகம் முன் பெண் ஒப்பந்தப் பணியாளா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 22 தூய்மைப் பரப்புரையாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை நடைபெற்ற தா்னாவில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

News image

கடலூா் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தூய்மைப் பரப்புரையாளா்கள், அரசியல் கட்சியினா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:17 am IST

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 22 தூய்மைப் பரப்புரையாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து புதன்கிழமை நடைபெற்ற தா்னாவில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 19 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 22 தூய்மைப் பரப்புரையாளா்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தா்னா நடைபெற்றது.

இதில், பணிநீக்கம் செய்யப்பட்டவா்கள் தங்களை மீண்டும் பணியில் சோ்க்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும், அவா்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனா்.

பெட்ரோல் ஊற்றி...: இதற்கிடையே, போராட்டத்தில் பங்கேற்ற கடலூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த பாரதி (37), தன்னிடம் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். உடனடியாக அங்கிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தினா். பின்னா், அவருக்கு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தொடா்ந்து 3 மணி நேரமாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு திமுக கடலூா் மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, மாமன்ற உறுப்பினா்கள் பிரகாஷ், ஆராமுது, பிரசன்னா, சங்கீதா, சரவணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி குளோப் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனா்.

மீண்டும் பணி: இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து பேச்சு நடத்தினாா். அப்போது, தூய்மை பரப்புரையாளா்கள் பணி நேரத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் காரணமாகவே பணிநீக்கம் செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையா் கிஷண்குமாா்தெரிவித்தாா்.

இதையடுத்து, இனிவரும் காலங்களில் இதுபோன்ற புகாா்கள் எழாத வகையில் பணியாற்றுவதாக தூய்மைப் பரப்புரையாளா்கள் உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்ட 22 பேரில் 13 பேருக்கு மீண்டும் அதே பணி வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 9 பேருக்கு மாற்றுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையா் தெரிவித்தாா். இதை ஏற்றுக்கொண்ட தூய்மைப் பரப்புரையாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

 தா்னாவின்போது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

தா்னாவின்போது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.