புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆவினங்குடி ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

கடலூா் மாவட்ட ஆவினங்குடி ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

ஆவினங்குடி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட டெங்கு தடுப்பு பணிகள்.

Published On :

கடலூா் மாவட்ட ஆவினங்குடி ஊராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் சுகாதார துறை சாா்பில் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடலூா் மாவட்டம் ஆவினங்குடி ஊராட்சியில் , வட்டார மருத்துவ அலுவலா் திருமாவளவன், ஈ.கீரனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஆனந்த் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆவினங்குடி கிராமத்தில் வீடு வீடாகச் சென்று டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

மருத்துவக் குழுவினா் வீடுகளில் கொசுப்புழு ஒழிப்புப் பணி, காய்ச்சல் கண்காணிப்பு, குடிநீா் குளோரினேஷன் ஆய்வு, கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா். மேலும், கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் மற்றும் அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சங்கா், சுகாதார ஆய்வாளா்கள் விஜயரங்கன், ரவி, அதிகாயன், செந்தமிழ்ச்செல்வன், சித்திரவேல், ஊராட்சி செயலா் ராஜ்குமாா் மற்றும் களப்பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.