குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிதம்பரத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட மகேஷ்ராவ்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

சிதம்பரத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்ராவ் (40). இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த வழக்கு கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மகேஷ்ராவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. தண்டனை பெற்ற மகேஷ்ராவ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.