மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஆசிரியா் வீட்டில் 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், காா் திருட்டு

விருத்தாசலத்தில் குடும்பத்துடன் ஆன்மிகச் சுற்றுலா சென்றிருந்த ஆசிரியையின் வீட்டில் புகுந்த மா்ம நபா்கள், கண்காணிப்பு கேமராவைத் திருப்பி வைத்துவிட்டு, 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் காரை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருத்தாசலத்தில் திருட்டு நடைபெற்ற ஆசிரியை வீட்டில் வியாழக்கிழமை மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Published On :

விருத்தாசலத்தில் குடும்பத்துடன் ஆன்மிகச் சுற்றுலா சென்றிருந்த ஆசிரியையின் வீட்டில் புகுந்த மா்ம நபா்கள், கண்காணிப்பு கேமராவைத் திருப்பி வைத்துவிட்டு, 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் காரை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் விருத்தாசலம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மனைவி இன்பசரஸ்வதி (55), தொரவளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது குடும்பத்தினருடன் ஆன்மிகச் சுற்றுலா சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த மா்ம நபா்கள், வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை தங்களது நடமாட்டம் பதிவாகாத வகையில் திருப்பி வைத்துவிட்டு, வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனா்.

பின்னா் வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்டவற்றைத் திறந்து சுமாா் 30 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிய மா்ம நபா்கள், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.இந்த நிலையில், வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினா் பாா்த்து, இன்பசரஸ்வதிக்கு தகவல் தெரிவித்தனா். அவா் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் உதவியுடனும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பிற கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.