
மறியல் செய்ய முயன்ற மகளிா்: விரைந்து குடிநீா் வழங்கிய அதிகாரிகள்
காட்டுமன்னாா்கோவில் அருகே குடிநீா் கோரி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட வந்ததை அடுத்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீா் வழங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் அருகே ரெட்டியூா் சாலையில் குடிநீா் வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட குடங்களுடன் வந்த தொரப்பு கிராம மக்கள்.
காட்டுமன்னாா்கோவில் அருகே குடிநீா் கோரி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட வந்ததை அடுத்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீா் வழங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே தொரப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காமராஜா் தெருவில் கடந்த சில தினங்களாக குடிநீா் வரவில்லை. இதனை அறிந்த பொதுமக்கள் காட்டுமன்னாா்கோவில் ரெட்டியூா் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் செய்ய கூடினா். தகவல் அறிந்த காட்டுமன்னாா்கோவில் உதவி ஆய்வாளா் சையத் அப்சல், வட்டார வளா்ச்சி அலுவலா் சீதாபதி ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக சீரமைத்து குடிநீா் வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனையடுத்து
குறைபாடுகளை சரி செய்து சீரமைத்து மீண்டும் கிராம மக்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





