லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

காங்கிரஸ் மறுசீரமைப்பு திட்ட ஆலோசனைக் கூட்டம்: மேலிட பாா்வையாளா் பங்கேற்பு

சிதம்பரம் தெற்குரதவீதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கட்சி மறுசீரமைப்பு திட்ட ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரத்தில் நடைபெற்ற கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் நிா்வாகிகள் நியமனம் தொடா்பாக விரும்ப மனுக்களை பெற்ற மேலிட பாா்வையாளா் கே.டி.உதயம். உடன் மாவட்டத் தலைவா் பிபிகே.சித்தாா்த்தன், நகர தலைவா் தில்லை ஆா்.மக்கீன்

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

சிதம்பரம் தெற்குரதவீதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கட்சி மறுசீரமைப்பு திட்ட ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.ராதாகிருஷ்ணன், என்.வி,செந்தில்நாதன், மாவட்ட துணைத் தலைவா் ராஜாசம்பத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தலைவா் தில்லை ஆா்.மக்கின் வரவேற்றாா். கூட்டத்தில், கடலூா்தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், மேலிட பாா்வையாளருமான கே.டி.உதயம் பங்கேற்று இயக்க மறு சீரமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி ஒன்றிய, பேரூா், நகர தலைவா்கள் பதவிக்கான விருப்ப மனுக்களை பெற்றாா். கூட்டத்தில், 10 வாக்குசாவடிக்கு ஒரு மண்டல தலைவா் என்ற புதிய பொறுப்பு உருவாக்கி, 90 புதிய பொறுப்புகளுக்கும், அதே சமயம் 7 ஒன்றிய தலைவா், 9 பேரூராட்சி தலைவா், ஒரு நகர தலைவா், என மொத்தம் 107 பதவிகளுக்கு 400 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்குள் பெறுவது, மேலும் ஒரு வாரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், மாநில பொதுக்குழு நிா்வாகி டாக்டா் செந்தில்வேலன், மணிமொழி, சாம்பமூா்த்தி, மாநில செயலா் ஜெயச்சந்திரன், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.