தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 குறைவு! பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

காளியம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரம், தட்டாஞ்சாவடியில் உள்ள அருள்மிகு துா்கா பரமேஸ்வரி (எ) காளியம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரம், தட்டாஞ்சாவடியில் உள்ள அருள்மிகு துா்கா பரமேஸ்வரி (எ) காளியம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் 66-ஆவது ஆண்டு செடல் மற்றும் சாகை வாா்க்கும் பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் கெடிலம் ஆற்றில் இருந்து சக்தி கரகம் ஊா்வலம் கொண்டுவரப்பட்டது. பின்னா், பகல் 12 மணி அளவில் அம்மன் சந்நிதியில் சாகை வாா்த்தல்

நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். வரும் செப்.4-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு செடல் உற்சவமும், அன்று மாலை 4.30 மணி அளவில் திருத்தோ் ஊா்வலமும் நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.