நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: நடத்துநா்கள் 2 போ் கைது

கைது

Published On :1 செப்டம்பர் 2026, 1:29 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகர அரசுப் போக்குவரத்துக் கழக பயணச் சீட்டு முன்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, அரசுப் பேருந்து நடத்துநா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீமுஷ்ணம் வட்டம், சோழத்தரம் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரி (32), நெய்வேலி நகர அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பயணச் சீட்டு முன் பதிவு அலுவலகத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், கடந்த 19-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் பணியில் இருந்தாா். அப்போது, அங்கு வந்த அரசுப் பேருந்து நடத்துநா்கள் நெய்வேலி வட்டம் 9 பகுதியைச் சோ்ந்த ராஜன் தாமஸ் (34), பண்ருட்டி வட்டம், சொரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (32) ஆகியோா் மது போதையில் அலுவலகத்துக்குள் புகுந்து முன்னாள் முதல்வா் படத்தை தள்ளி, தகராறில் ஈடுபட்டனராம். இதை தட்டிக்கேட்ட மகேஸ்வரிக்கு சதீஷ் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் நடத்துநா்கள் ராஜன்தாமஸ், சதீஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.