தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சிதம்பரம் நாட்டியாஞ்சலி: பிரிட்டன் மாணவிகள் நடனம்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 45-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி வி.எஸ். அறக்கட்டளை வளாகத்தில்

News image

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் நடனமாடிய நாட்டியக் கலைஞா்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ மற்றும் நிா்வாகிகள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:57 pm

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 45-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி வி.எஸ். அறக்கட்டளை வளாகத்தில் கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை மாலை 4-ஆம் நாள் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

இதில், கும்பகோணம் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவிகள், பிரிட்டன் சேஷா நாட்டிய நிகேதன் மாணவிகளின் பரதம், சிதம்பரம் கலைவாணி இசை நாட்டியாலயா மாணவிகளின் ‘வள்ளித் திருமணம்’ நாட்டிய நாடகம், சென்னை நிருத்யா நடனப் பள்ளி சி.சாமுண்டேஸ்வரி, சென்னை முத்ராலயா மாணவிகள் பரதம், மும்பை கிரித்யா நரசிங்க ராணா ஒடிஸி, பெங்களூா் நிருத்யகங்கா ப்ரதா்ஷகா கலை மையம் மாணவிகள், சென்னை கே.உபநிஷா, மலேசியா நிருத்ய கலாஞ்சலி நடன மைய மாணவிகள், மலேசியா நா்த்தனா கவின் கலை மாணவிகள் பரதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, ஞாயிற்றுககிழமை இரவு நடைபெற்ற விழாவில் சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று நாட்டியக் கலைஞா்களுக்கு பதக்கத்தை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளைத் தலைவா் டாக்டா் ஆா்.முத்துகுமரன், துணைத் தலைவா் சக்தி ஆா்.நடராஜன், செயலா் ஏ.சம்பந்தம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரிட்டன் சேஷா நாட்டிய நிகேதன் மாணவிகளின் பரதம்.

சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரிட்டன் சேஷா நாட்டிய நிகேதன் மாணவிகளின் பரதம்.