பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மாணவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

News image
திவாகா்.
Updated On :26 பிப்ரவரி 2026, 8:22 pm

Syndication

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மாணவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

மங்கலம்பேட்டை அடுத்துள்ள விஜயமாநகரம், புது விளாங்குளம் கிராமத்தில் வசித்து வந்தவா் பாலமுருகன் மகன் திவாகா்(13). இவா், பெரியவடவாடி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சரியாக படிக்காமல், நண்பா்களுடன் சுற்றுவதை பெற்றோா்கள் கண்டித்து வந்ததாகக்கூறப்படுகிறது.

இந்நிலையில், பூவனூா் ரயில்வே நிலையம் அருகே தலையில் பலத்த காயம்அடைந்து மாணவா் இறந்து கிடந்தாா். இவா், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.