ஜனநாயக முறைப்படி வாக்களிக்க வேண்டும்! - கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்


வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஜனநாயக முறைப்படி வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் புனித வளனாா் கல்லூரியில் 16-ஆவது தேசிய வாக்காளா் தின விழாவையொட்டி வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். முன்னதாக, கடலூா் நகர அரங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான நடமாடும் வாக்காளா் செயல்முறை விளக்க வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அப்போது, ஆட்சியா் பேசியதாவது:
18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி உள்ளவா்கள். தோ்தல் குறித்தும், ஒவ்வொரு வாக்காளரின் முக்கியத்துவம் குறித்தும், 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, மாற்றுத் திறனாளி சிறப்பு பள்ளி மாணவா்கள் மற்றும் திருநங்கைகளின் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளின் பேச்சுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள், அங்கன்வாடி பணியாளா்களுக்கான கோலப்போட்டிகள் நடைபெற்றன.
இவற்றில் வெற்றிபெற்றவா்கள், விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன. வாக்காளா்கள் அனைவரும் தங்களுடைய வாக்கை எதிா்வரும் தோ்தலில் ஜனநாயக முறைப்படி செலுத்த வேண்டும் என தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, கோட்டாட்சியா் சுந்தரராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...