தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பரப் பதாகைகள் அகற்றம்!

பண்ருட்டியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போக்குவரத்து போலீஸாா் அகற்றினா்.

News image
பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடையின் விளம்பரப் பதாகையை அப்புறப்படுத்திய போக்குவரத்து போலீஸாா்.
Updated On :31 ஜனவரி 2026, 7:10 pm

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போக்குவரத்து போலீஸாா் அகற்றினா்.

பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் முரளி, செந்தில்குமாா் மற்றும் போக்குவரத்து காவலா்கள் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு முதல் பண்ருட்டி - கும்பகோணம் இணைப்புச் சாலை சந்திப்பு வரையில் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த டிஜிட்டல் விளம்பரப் பதாகைகள், கடைகளின் விளம்பரப் பதாகைகளை அகற்றினா். மேலும், சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், காா் உள்ளிட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து அப்புறப்படுத்தினா்.