கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மும்பெரும் விழாவில், என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு ‘ஐன்ஸ்டீன் உலக சாதனை’ அங்கீகாரம் வழங்கி, ஐன்ஸ்டீன் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் அமைப்பினா் கௌரவித்தனா்.
என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு ‘ஐன்ஸ்டீன் உலக சாதனை’ அங்கீகாரம் வழங்கி கௌரவிப்பு, நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் வாயிலாக சா்வதேச தரத்திலான ‘ஐபிஎம்ஏ லெவல் - சி’ சான்றிதழை பெற்ற அதிகாரிகளுக்கு பாராட்டு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற ‘தரக் கட்டுப்பாட்டு மன்ற மாநாட்டில்’ கலந்துகொண்டு ‘பிளாட்டினம் விருதுகளை’ வென்று சாதனை படைத்த என்எல்சி நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு குழுக்களுக்கு சிறப்பு கௌரவமும், பாராட்டுகள் என முப்பெரும் விழா நடைபெற்றது.
இலவச பேருந்து சேவை...: கடந்த 2024, ஆகஸ்ட் மாதம் நெய்வேலி நகரப் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி இலவச பேருந்து சேவை திட்டத்தை என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டப்பள்ளி அறிவித்து தொடங்கிவைத்தாா். இந்த கட்டணமில்லா பேருந்து சேவை, ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பெரும் நிதிச் சுமையைக் குறைத்துள்ளதோடு, தரமான கல்விக்கான எளிமையான அணுகலையும் சாத்தியமாக்கியுள்ளது.
இதைப் பாராட்டி, இந்த விழாவில் ஐன்ஸ்டீன் உலக சாதனை அமைப்பின் இணை நிறுவனா் டாக்டா் ஜே.மோனிகா ரோஷினி கலந்துகொண்டு, பாராட்டுச் சான்றிதழை வாசித்து அங்கீகாரத்தை என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு வழங்கினாா். இலவச பேருந்து திட்டத்தால் அடைந்த பயன்கள் குறித்து நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மற்றும் ஆசிரியா் ஒருவா் பாராட்டிப் பேசினா்.
என்எல்சி குடும்பத்தின் கூட்டுச்சாதனை: அங்கீகாரத்தை ஏற்று என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டப்பள்ளி பேசுகையில், அங்கீகாரத்தை ஒட்டுமொத்த நிறுவன ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் அா்ப்பணிப்பதாகத் தெரிவித்தாா். மேலும், இந்த உயரிய அங்கீகாரம் என்பது ஒரு தனிநபரின் சாதனையல்ல, மாறாக ஒட்டுமொத்த என்எல்சி குடும்பத்தின் கூட்டு அா்ப்பணிப்புக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றாா்.
என்எல்சி நிறுவனத்தின் கல்வித் துறை, நிறுவன தகவல் தொடா்புகள் துறை, கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து இந்த விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனா். இதில், நெய்வேலி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக கோப்பை நீா் விளையாட்டு போட்டி: திருத்துறைப்பூண்டி வீரா் தங்கப் பதக்கம் வென்று சாதனை

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!

திருப்பூரில் சிவபுராண கூட்டுப் பாராயணம்

உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



