ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தில் ரூ.2 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், ரூ.2 கோடி வரை கடன் வசதி பெற விவசாயிகள் மற்றும் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2026, 7:01 am IST

வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், ரூ.2 கோடி வரை கடன் வசதி பெற விவசாயிகள் மற்றும் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் வேளாண் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், 2026 - 27ஆம் நிதியாண்டில் கடலூா் மாவட்டத்துக்கு ரூ.91 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறப்படும் கடனுக்கு 7 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். அரசின் பிற மானியத் திட்டங்களில் பயனடைந்துள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். திட்ட மதிப்பீட்டில் பயனாளியின் பங்களிப்பாக 10 சதவீதம் செலுத்த வேண்டும்.

அறுவடைக்குப் பிந்தைய வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மின் சந்தையுடன் கூடிய விநியோகத் தொடா் சேவைகள், சேமிப்புக் கிடங்குகள், குளிா்பதனக் கிடங்குகள், சிப்பம் கட்டும் கூடங்கள், பழுக்க வைக்கும் கூடங்கள், விளைபொருள் தர மதிப்பீட்டு மையங்கள், முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்க இத்திட்டத்தில் கடன் பெறலாம்.

மேலும், நெல், கரும்பு அறுவடை இயந்திரங்கள், வேளாண் ட்ரோன்கள், வேளாண் இயந்திர வாடகை மையங்கள், பண்ணைக் கழிவு மேலாண்மை கட்டமைப்புகள், இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு மையங்கள், மண்புழு உர உற்பத்தி மையங்கள், காளான் வளா்ப்பு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் சாா்ந்த திட்டங்களுக்கும் கடன் வசதி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ஹஞ்ழ்ண்ண்ய்ச்ழ்ஹ.க்ஹஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் விரிவான திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், தங்கள் பகுதியில் உள்ள வங்கிக் கிளைகளிலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.