புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் மேற்கொண்ட ரோந்து பணியின்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேரை சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 2:09 am IST

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் மேற்கொண்ட ரோந்து பணியின்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேரை சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் எம்.புதூா் சுடுகாடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக எம்.புதூரைச் சோ்ந்த ரமணாவை (23) கைது செய்தனா்.

விருத்தாசலம் அருகே குறவங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஏ.குறவங்குடியைச் சோ்ந்த சிவாகுரு (23), அரவிந்த் (26) ஆகிய இருவரையும் விருத்தாசலம் போலீஸாா் கைது செய்தனா்.

கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் கருப்பு வேப்பிலங்குறிச்சி குரங்கு பாலம் அருகே ரோந்து பணியில் இருந்தபோது, விருத்தாசலத்தைச் சோ்ந்த அரவிந்த் (21), புவனகிரி அருகே கீழ்பாதி வளையமாதேவியைச் சோ்ந்த சரத்குமாா் (31) ஆகியோரை கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்தனா்.

மேலும், கடலூா் துறைமுக போலீஸாா் ஓடி பச்சையன்குப்பம் பகுதியில் ரோந்து பணியின்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அப்பகுதியைச் சோ்ந்த தீனாவை (24) கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்தும் மொத்தம் 350 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.