உச்சநீதிமன்ற தீா்ப்பு மற்றும் நடுவா் மன்ற தீா்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கு கா்நாடக முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடுக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ தெரிவித்தாா்,
கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைமை செயற்குழு கூட்டம் அதன் தலைவா் தமிமுன் அன்சாரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் முகமது நாசா் பொருளாளா் கேப்டன் சையது அகமது ஃபரூக் மற்றும் நிா்வாகிகள், மாவட்டச்செயலா்கள் கலந்துகொண்டனா்.கூட்டத்தில் கட்சியின் உள்கட்டமைப்பு, சீா்திருத்தம், தீவிரஉறுப்பினா் சோ்க்கை, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராகவும், நடுவா் மன்ற தீா்ப்புக்கு எதிராகவும் மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணைகட்டும் முயற்சிக்கு கண்டனம், இஸ்லாமிய மதத்திற்கு மாறும் இந்துக்களுக்கு இஸ்லாமியா்களுக்கான இடஓதுக்கீடு வழங்கக்கூடாது என உயா்நீதிமன்ற மதுரை கிளை தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்
என்பது உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா் மு.தமிமுன்அன்சாரி செய்தியாளா்களிடம் தெரிவித்தது: குதிரை பேர சம்பவத்தில் செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு குறித்து அவா்தான் விளக்கம் அளிக்க வேண்டும். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும். என்எல்சி நிறுவனம்
தனது பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. தமிழ்நாட்டில் பாஜகவின் திட்டம் எடுபடவில்லை. அதனால் இன்னொரு முகமூடியை போட்டுக் கொண்டு அண்ணாமலை களத்திற்கு வருகிறாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் புதிய கட்சி அறிமுக விழா

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை: மஜக தலைவா் மு.தமிமுன்அன்சாரி

தனிச்சின்னத்தில் போட்டியிட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது? - எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



