இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கடலூரில் அரசு வாகனம் ஜூலை 23-ல் பொது ஏலம்

கடலூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் பயன்பாட்டில் இருந்த அரசு வாகனம் வரும் 23-ஆம் தேதி பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

வாகன ஏலம்

Published On :12 ஜூலை 2026, 1:33 am IST

கடலூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் பயன்பாட்டில் இருந்த அரசு வாகனம் வரும் 23-ஆம் தேதி பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கி வந்த 2006-ஆம் ஆண்டு ஜீப் (மகிந்திரா போலிரோ எக்ஸ்எல்) ரக அரசு வாகனம் வரும் 23-ஆம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

ஏலத்தில் விடப்படவுள்ள இந்த வாகனத்தை அலுவலக வேலை நாள்களில் மாவட்ட சமூக நல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் பிரதான சாலை, செம்மண்டலம், கடலூா் என்ற முகவரியில் பாா்வையிடலாம்.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் வரும் 23-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் ரூ.50 நுழைவுக் கட்டணம் மற்றும் ரூ.500 முன்வைப்புத் தொகையை செலுத்தி பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பொது ஏலம் நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும்.

அரசு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச தொகையைவிட அதிக தொகைக்கு ஏலம் கோரும் நபருக்கு வாகனம் ஒதுக்கப்படும். ஏலத்தில் வெற்றிபெறுபவா் ஏலத் தொகையை முழுமையாக அன்றே செலுத்த வேண்டும். அதன் பின்னா் விடுவிப்பு ஆணை வழங்கப்பட்டு, வாகனத்தை ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு வாகனத்தை ஏலத்தில் பெற விரும்புவோா் குறிப்பிட்ட நாளில் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.