பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2026, 1:38 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகத்துக்குள்பட்ட தொட்டப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (55), கூலித் தொழிலாளி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியைப் பிரிந்த இவா், சகோதரி வீட்டில் வசித்து வந்தாா்.

வெங்கடேசன் கடந்த 9-ஆம் தேதி இரவு தொட்டப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நடந்து சென்றாா். அப்போது, எதிா் திசையில் வந்த பைக் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் வெங்கடேசனை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.