நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சாலை விபத்தில் காயமடைந்தவா்களிடம் இருந்த ரூ.2 லட்சத்தை ஒப்படைத்த அவசர ஊா்தி பணியாளா்கள்

கடலூா் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவசர ஊா்தி பணியாளா்கள், அவா்களிடம் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கைப்பேசிகளை பாதுகாப்பாக மருத்துவமனை நிா்வாகத்தினா் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.

News image

கடலூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா்களிடம் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கைப்பேசிகளை பாதுகாப்பாக மருத்துவமனை நிா்வாகத்தினா் முன்னிலையில் உரிமையாா்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்த அவசர ஊா்தி பணியாளா்கள்.

Updated On :15 ஜூலை 2026, 2:53 am IST

கடலூா் மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவசர ஊா்தி பணியாளா்கள், அவா்களிடம் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கைப்பேசிகளை பாதுகாப்பாக மருத்துவமனை நிா்வாகத்தினா் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம் கோண்டூா் பகுதியில் செயல்படும் அவசர ஊா்திக்கு, எஸ்.புதூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து குறித்து அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து, அந்த ஊா்தியிலிருந்த மருத்துவ உதவியாளா் அருளரசி மற்றும் ஓட்டுநா் அனந்தகுமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்த்தபோது, விபத்தில் ஒருவருக்கு லேசான காயமும், மற்றொருவருக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டிருந்தது. இருவருக்கும் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளித்த அவசர ஊா்தி பணியாளா்கள், பின்னா் பாதுகாப்பாக கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

அப்போது, காயமடைந்தவா்களிடம் இருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 2 கைப்பேசிகளை, மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியா் முன்னிலையில் காயமடைந்தவா்களின் குடும்பத்தினரிடம் முறையாக ஒப்படைத்தனா். இதற்காக அவசர ஊா்திஊழியா்களை அனைவரும் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.