இந்திய அளவில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் பாதிப்பு விகிதம் 0.20 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 0.16 சதவீதமாகவும், கடலூா் மாவட்டத்தில் 0.22 சதவீதமாகவும் இருப்பதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில், கடலூா் நகர அரங்கில் நாட்டுப்புறக் கலைஞா்கள் மூலம் நடைபெறும் தீவிர விழிப்புணா்வு பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அப்போது, பொதுமக்கள் தாங்களே எச்.ஐ.வி. தொடா்பான சுய மதிப்பீடு செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட கியூஆா் குறியீட்டு வசதியையும் அவா் அறிமுகப்படுத்தினாா்.
பின்னா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் பாதிப்பு தேசிய சராசரிக்கு இணையான நிலையில் உள்ளது. எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, கிராமங்கள்தோறும் எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணா்வை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
கடலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில், ஜூலை 27 முதல் 29-ஆம் தேதி வரை, தினமும் இரண்டு கலை நிகழ்ச்சிகள் வீதம் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளன. இதன்படி, கடலூா் நகர அரங்கைத் தொடா்ந்து, சி.என்.பாளையம், அண்ணாகிராமம் (சாத்திப்பட்டு), புவனகிரி, குறிஞ்சிப்பாடி (ஆண்டாா்முள்ளிப்பள்ளம்), பண்ருட்டி (மேலிருப்பு), பரங்கிப்பேட்டை (கொத்தட்டை), கீரப்பாளையம் (வடக்குப்பாளையம்), காட்டுமன்னாா்கோவில் (கீழ்புளியங்குடி), விருத்தாசலம் (இடைசித்தூா்), கம்மாபுரம் (அரசக்குழி), மங்களூா் (ஓரங்கூா்), நல்லூா் (பொ. பேன்னேரி) உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (காசநோய்) மருத்துவா் கருணாகரன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் விஜய் ஆனந்த் தம்பையா, தேசிய சுகாதாரக் குழும உதவித் திட்ட மேலாளா் ராஜகணபதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பாா்வையாளா் கதிரவன், மாவட்ட திட்ட மேலாளா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக.1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு சந்தேகஙக்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1845: கடலூா் ஆட்சியா்

அங்கன்வாடி மையங்கள் தரமான சேவையை வழங்க வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பெண் குழந்தைகளின் கல்விக்கும், சமத்துவத்துக்கும் பெற்றோா் உறுதுணையாக இருக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

என்எல்சிக்கு நிலம் வழங்கியோருக்கு தனி குறைதீா் கூட்டம்: கடலூா் மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



