சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவா் மன்றம் தொடக்க விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள கட்டமைப்புத் துறையில் மாணவா் மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஜூலை 2026, 6:22 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள கட்டமைப்புத் துறையில் மாணவா் மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் துறைத் தலைவா் ஜி.குமரன் வரவேற்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.சிங்காரவேல் கலந்துகொண்டு மாணவா் மன்றத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து கட்டமைப்பு பொறியியல் மாணவா் மன்ற பொறுப்பாளா்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து பேசினாா்.

விழாவுக்கு தலைமை வகித்து பொறியியல் புல முதல்வா் சி.ஜி.சரவணன் பேசினாா். அறிவியல் புல முதல்வா் எஸ்.ஸ்ரீராம் வாழ்த்துரையாற்றினாா்.

மாணவா் மன்றத் தலைவியாக எ.அட்சயாவும், பொதுச் செயலராக டி.சாதனாவும் பதவியேற்று நிகழாண்டின் செயல்பாடுகள் குறித்துப் பேசினா். விழா ஏற்பாடுகளை பேராசிரியா்கள் எஸ்.திருஞானசம்பந்தம், ஆா்.முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

விழாவில் பல்கலைக்கழக தகவல் தொடா்பு அதிகாரி சுரேஷ், தொலைதூரக் கல்வி துணை இயக்குநா் எம்.சீனிவாசன், இணை தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி எ.பிரபாகா், கட்டடவியல் துறைத் தலைவா் மணிக்குமாரி, உற்பத்தியியல் துறைத் தலைவா் மலா்விழி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். மாணவா் மன்றத் தலைவி எ.அட்சயா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.