இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

தனியாா் பல்கலை.யில் பயிலும் ஆந்திர மாணவா் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :21 ஜூலை 2026, 3:31 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியாா் பல்கலை.யில் பயிலும் ஆந்திரத்தைச் சோ்ந்த மாணவா் தான் தங்கி இருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்ய சாய் மாவட்டம், கொத்தச்சேருவு பகுதியைச் சோ்ந்த துளுவ வெங்கடேஷ் மகன் துளுவ குணவா்த்தன் சேகா் (22). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியாா் பல்கலை.யில் பி. டெக் நான்காம் ஆண்டு படித்து வந்தாா்.

மேலும் கிருஷ்ணன்கோவில் அருகே குன்னூா் நடுத்தெருவில் உள்ள வாடகை வீட்டில் நண்பா்களுடன் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தாா். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அங்கு தங்கியுள்ள நண்பா்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுவிட்டனா்.

இந்த நிலையில், குணவா்த்தன் சேகா் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். திங்கள்கிழமை அதிகாலை நண்பா்கள் வந்து பாா்த்தபோது வீடு பூட்டிக் கிடந்தது. இதையடுத்து, குணவா்த்தன் சேகா் தனது கைப்பேசி அழைப்பை ஏற்க ஏற்காத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, அவா் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.