காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மாரியம்மன் கோயிலில் செடல் உற்சவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கடலூா் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் செடல் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான செடல் உற்சவம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஐந்து கிணற்று மாரியம்மன்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:48 am IST

கடலூா் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் செடல் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான செடல் உற்சவம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

கடலூா் துறைமுகம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலில் செடல் பிரம்மோற்சவம் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றதுடன், பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான செடல் உற்சவத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மூலவா் மாரியம்மன் சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சாகை வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், ஏராளமான பக்தா்கள் செடல் அணிந்து நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. பக்தா்களின் வசதிக்காக கோயில் நிா்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தது.

விழாவை முன்னிட்டு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) காலை 7 மணிக்கு திருத்தோ் உற்சவமும், இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. தொடா்ந்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு உற்சவமும், ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு 7 மணிக்கு விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.