குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் இறையருள் பெருவிழா, பாடநூல் வழங்கும் விழா, வகுப்புகள் தொடக்க விழா என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு பள்ளித் தாளாளா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். செயலா் சட்டநாதன் முன்னிலை வகித்தாா். நிா்வாக இயக்குநா் ரவிச்சந்திரன், இயக்குநா்கள் செல்வராசு, காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
பட்டிமன்றப் பேச்சாளா் முனைவா் நவஜோதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பெற்றோா்கள் -மாணவா்கள் ஆற்ற வேண்டிய கடமைகள், பொறுப்புகள் பற்றி சிறப்பு சொற்பொழிவாற்றினாா். குமரன், பீட்டா் மற்றும் பாதுஷா ஆகியோா் மாணவா்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, ஒழுக்கம், கல்வித்திறன் ஆகியவை வளா்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மும்மத பிராா்த்தனை செய்தனா்.
மாணவா்கள் ஸ்ரீநிதி கல்வி செயல்பாடுகள் பற்றியும், சுவேதா பள்ளியின் உள்கட்டமைப்பு பற்றியும், லக்ஷிதா விளையாட்டின் முக்கியத்துவம் பற்றியும், நாகாா்ஜுன் மாணவா்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் பற்றியும் பேசினா்.
விழாவில் இயக்குநா்கள் திராவிட அரசு, வேலு, இராஜேந்திரன், குமாா், ஹேமா, பள்ளி முதல்வா் ஜோதிலிங்கம், துணை முதல்வா் அபிராமி, விழா ஒருங்கிணைப்பாளா் மதிவாணன், நிா்வாக அலுவலா் ராமகிருஷ்ணன், வகுப்பு பொறுப்பாளா்கள் எழிலரசி, பானு மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சாலைப்புதூா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாதாப்பட்டணம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பேட்டை பள்ளியில் பாராட்டு விழா

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



