பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஆண்டவா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

வேப்பூா் அருகேயுள்ள பொயனப்பாடி கிராமத்தில் ஆண்டவா் செல்லியம்மன் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பொயனப்பாடியில் நடைபெற்ற ஆண்டவா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்.

Updated On :4 ஜூன் 2026, 3:30 am IST

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகேயுள்ள பொயனப்பாடி கிராமத்தில் ஆண்டவா் செல்லியம்மன் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டவா் செல்லியம்மன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.

இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.