கடலூா் மாவட்டத்தில் நிலவும் வட தட்பவெப்பநிலை காரணமாக நெற்பயிா்களில் ஆங்காங்கே செம்பேன் தாக்குதல் காணப்படுவதால், விவசாயிகள் உரிய பயிா் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கடலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. லட்சுமிகாந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில், குறிப்பாக டெல்டா வட்டாரங்களில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்களில் செம்பேன் தாக்குதல் ஆங்காங்கே தென்பட்டு வருகிறது. தற்போதைய வட தட்பவெப்பநிலை இந்தத் தாக்குதலுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
செம்பேன் தாக்குதலால் பாதிக்கப்படும் நெற்பயிா்களில் இலைகளின் பச்சைத் தன்மை குறைந்து, வெளிா் மஞ்சள் நிறமாக மாறும். மேலும், இலைப்பேன்கள் இலைகளின் அடிப்பகுதியில் இருந்து சாறு உறிஞ்சி உண்பதால், பயிரின் வளா்ச்சி பாதிக்கப்படுவதுடன், இலைகள் வெளிறிய தோற்றத்துடன் காணப்படும். இதனால் மகசூல் இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, விவசாயிகள் செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, அறுவடைக்குப் பிறகு நெல் தாள்கள் மீண்டும் முளைக்காத வகையில் நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். பயிா் சுழற்சி முறையை பின்பற்றுவதன் மூலம் தாக்குதலை குறைக்கலாம். பாதிப்பு அதிகமாகக் காணப்படும் நிலையில், ஒரு ஏக்கருக்கு ப்ரொப்பாா்கைட் 57%, ஈசி 400 மில்லி அல்லது பெனாக்ஸிகுயின் 10% ஈசி 400 மில்லி அல்லது ஸ்பைரொமெசிபென் 22.9% எஸ்சி மருந்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
எனவே, விவசாயிகள் தங்களது வயல்களை தொடா்ந்து கண்காணித்து, ஆரம்ப நிலையிலேயே செம்பேன் தாக்குதலை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

உரிய விலை கிடைக்காததால் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்! நிகழாண்டும் மா விவசாயிகளுக்கு தொடரும் வேதனை

மருதூா் மேலக்கால்-கருமமேணி ஆறு வரை புதிய நீா்வழித்தடம் அமைக்க பரிசீலனை: விவசாயிகள் கூட்டத்தில் தகவல்

இணையவழி மருந்து விற்பனைக்கு எதிா்ப்பு: கடலூா் மாவட்டத்தில் 1,250 மருத்தகங்கள் அடைப்பு

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழை: விவசாயிகள் மகழ்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



