மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

வேப்பூரில் போலீஸாா் தீவிர நடை ரோந்து: மாவட்ட எஸ்.பி. பங்கேற்பு

வேப்பூா் கடை வீதியில் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நடை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

News image

வேப்பூா் கடை வீதியில் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நடை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :12 ஜூன் 2026, 1:29 am IST

கடலூா் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வேப்பூா் பகுதியில் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் போலீஸாா் தீவிர நடை ரோந்துப் பணியில் புதன்கிழமை இரவு ஈடுபட்டனா்.

வேப்பூா் கடை வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸாா் சிறப்பு நடை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

மேலும், பொதுமக்கள், வியாபாரிகளிடம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதேபோல, சந்தேகத்துக்கிடமான நபா்கள் மற்றும் வாகனங்கள் குறித்து உடனடியாக காவல் துறையினரை தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

திட்டக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா், வேப்பூா் காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் மற்றும் போலீஸாா் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.