/

ஆட்டோக்களை அதிவேகமாக ஓட்டக் கூடாது: ஓட்டுநா்களுக்கு போலீஸாா் அறிவுரை

பரங்கிப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 1:48 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை காவல் சரகத்தில் ஆட்டோக்களை அதிவேகமாக ஓட்டக் கூடாது என ஓட்டுநா்களிடம் போலீஸாா் அறிவுறுத்தினா்.

பரங்கிப்பேட்டை நகர காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா், இந்தப் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து பல்வேறு அறுவுத்தல்களை வழங்கினாா்.

அப்போது, ஆட்டோவை அதிவேகமாக ஓட்டக் கூடாது. அதிக ஒலி எழுப்பி பாடல் இசைத்துக்கொண்டு செல்லக் கூடாது. பள்ளி, கல்லூரி பகுதிகளில் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும்.

வாகனங்களுக்குரிய அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும். போதையில் வாகனத்தை இயக்கக் கூடாது. சட்டவிரோத செயல்பாடுகளுக்கு துணைபோகக் கூடாது என அறிவுரை வழங்கினாா்.