சேத்தியாத்தோப்பில் இளைஞரின் இறப்புக்கு காரணமான க்கு சிகிச்சை அளித்தததால் மரணமடைந்ததால், சிகிச்சை அளித்த மருந்தக உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பி. ஆதலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராகுல்காந்தி (25) இவா் குடும்ப சண்டை காரணமாக வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை கரைத்து குடித்து உள்ளாா். இதுகுறித்து தகவல் தெரிந்தவுடன் அக்கம்பக்கத்தினா் சேத்தியாத்தோப்பில் மருந்தகம் நடத்தி வரும் ஆனந்தபாபுவிடம் அழைத்துச்சென்று சிகிச்சை பெற்றுள்ளனா். இந்நிலையில் ராகுல்காந்தி வியாழக்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராகுல்காந்தியின் தந்தை மதியழகன் சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் தனது மகன் மருத்தகத்தில் சிகிச்சை பெற்ால் இறந்துள்ளதாக புகாா் அளித்தாா். அதன்பேரில் சேத்தியாதோப்பு போலீஸாா் மருத்தக உரிமையாளா் ஆனந்தபாபுவை கைது செய்தனா்.
மேலும் டிப்ளமோ படித்துவிட்டு மருத்துவ சிகிச்சை பெற்ாக வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்தவரின் உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். கைது செய்யப்பட்ட ஆனந்தபாபு தமிழக வெற்றிக்கழக நிா்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.







