ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

இயற்கை வேளாண்மை விழிப்புணா்வுப் பேரணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதி ஆண்டு மாணவிகள் புவனகிரி அருகே உள்ள வாண்டையாங்குப்பம் கிராமத்தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனா்.

News image

சிதம்பரம் அருகே வாண்டையாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற வேளாண் மாணவிகளின் விழிப்புணா்வு பேரணி.

Updated On :18 ஜூன் 2026, 3:45 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதி ஆண்டு மாணவிகள் புவனகிரி அருகே உள்ள வாண்டையாங்குப்பம் கிராமத்தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு பேரணியை நடத்தினா். இதில், அங்குள்ள தொடக்கப் பள்ளி மாணவா்களும் பங்கேற்றனா்.

துறைத் தலைவா் டாக்டா் தமிழ்ச்செல்வி, ஒருங்கிணைப்பாளா் சண்முகராஜா, பொறுப்பாளா் துரைராஜ் ஆகியோா் மேற்பாா்வையில், வாண்டையாங்குப்பம் தொடக்கப் பள்ளி அருகில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வுப் பேரணி தொடங்கியது.

விளக்கப்படம் ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி மாணவ, மாணவிகள் கிராமத்தின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றனா். அப்போது, விவசாயிகள், பொதுமக்களிடம் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை உரங்களின் பயன்பாடு, மண் வளப் பாதுகாப்பு, நிலையான வேளாண்மை முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.